அதிகரிக்கும் போர் பதற்றம் : ஈரான் அதிபரிடம் அட்டெண்டன்ஸ் போட்ட பிரதமர் மோடி..

 
PM Modi - Iran President PM Modi - Iran President


போர் பதற்றம் குறித்து ஈரான் அதிபர் மசூத் பெசெஸ்கியானுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் கேட்டறிந்தார்.  

ஈரானின் அணு ஆயுதத் திட்டங்கள் அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி அந்நாட்டின் அணு ஆயுத தளங்கள், ராணுவ நிலைகள் மற்றும் எண்ணெய் கிடங்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.  இதற்கு ஈரான்  தரப்பிலும் கடுமையான பதிலடி  கொடுக்கப்பட்டு வருகிறது.  இருதரப்பும் மாறி மாறி நடத்தும்  கடுமையான தாக்குதல்களால்,  இருப்பக்கத்திலுமே  ஏராளமான உயிரிழப்புகள்,  பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. தொடர் தாக்குதலால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஆரம்பத்திலிருந்தே இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்துவரும் அமெரிக்கா தற்போது ஈரான் மீது நேரடி தாக்குதல் நடத்தியிருக்கிறது.   ஈரானில் ஃபார்டவுவ் , நடான்ஸ் மற்றும் இஸ்பாஹான் ஆகிய மூன்று அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருப்பது ஒட்டுமொத்த உலகையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.  

iran

அத்துடன் ஈரான் அமைதி பாதைக்கு திரும்பாவிட்டால் பெரும் அழிவை சந்திக்க நேரிடும் என்றும் அதிபர்  ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.  மத்தியஸ்தம் செய்து போரை முடிவுக்கு கொண்டு வரும் என எதிர்பார்த்தால், தனது படைகளை இறக்கி தாக்குதல் நடத்தி அங்கு சூழலையே தலைகீழாக மாற்றி வைத்துள்ளது. அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது. ஈரானுக்கு ஆதரவாக போரில் நுழைவதாக ஏமன் ஹவுதி படை அறிவித்துள்ளது.  அதேநேரம் ரஷ்யா, சீனா, பெலாரஸ் உள்ளிட்ட நாடுகளும் ஈரானுக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளன. 

Image

இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் நடுநிலையாக இருந்துவருகின்றன.  மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அசாதாரன சூழல் காராணமாக நாளுக்கு நாள் போர்பதற்றம் அதிகரித்து  வருகிறது. இதனைடையே  இஸ்ரேல் - ஈரான் போர் குறித்து இந்தியா மௌனம் காத்து வருவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின. இந்த நிலையில், போ பதற்றம் குறித்து  ஈரான் அதிபர் அசூத் பெசெஸ்கியானுடன்  பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளார்.  போர் பதற்றம் குறித்து விவாதித்ததாகவும், அமைதிக்கான பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.