டெல்லியில் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி துவக்க உரை!
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி துவக்க உரையாற்றி வருகிறார்.
இந்தியா தலைமை தாங்கும் ஜி-20 மாநாடு டெல்லியில் இன்று பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் தொடங்குகிறது. இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் பொருளாதாரம் மேம்பாடு, காலநிலை மாற்றம், எரிசக்தி விவகாரம் ,சர்வதேச கடன் கட்டமைப்பு, சீர்திருத்தம், கிரிப்டோ கரன்சி மீதான கட்டுப்பாடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. ஜி-20 மாநாடு உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமான மூலம் இந்தியா வந்தடைந்தார். அதிபர் ஜோ பைடனை மத்திய இணை அமைச்சர் வி.கே. சிங் வரவேற்றார் .அவருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் ஜோ பைடன் சந்தித்து பேசினார். இந்தியா வந்துள்ள ஜி-20 தலைவர்களுக்கு நேற்று இரவு சுவையான இந்திய சைவ உணவு பரிமாறப்பட்டது. ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெறும் நிலையில் தொழில்நுட்ப முன்னேற்றம், உட்கட்டமைப்பு, மனிதவளம் போன்றவற்றை சர்வதேச நாடுகள் அறிந்து கொள்ள இது மிகச்சிறந்த நல்வாய்ப்பாக அமையும் என்று கூறப்படுகிறது.
#WATCH | G 20 in India | PM Modi at the G 20 Summit says "Before we start the proceedings of G20, I want to express my condolences over the loss of lives due to an earthquake in Morocco. We pray that all injured recover at the earliest. India is ready to offer all possible… pic.twitter.com/ZTqcg11cKI
— ANI (@ANI) September 9, 2023
இந்த நிலையில், ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி துவக்க உரையாற்றி வருகிறார். G20 இன் நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு முன், மொராக்கோவில் நிலநடுக்கம் காரணமாக உயிர் இழந்தவர்களுக்கு எனது இரங்கலை தெரிவிக்க விரும்புகிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம். இக்கட்டான நேரத்தில் மொராக்கோவுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது என கூறினார்.