#BREAKING: ரயில் விபத்து - ஒடிசா விரைகிறார் பிரதமர் மோடி!

 
pm modi

ஒடிசாவில் ரயில் விபத்துக்குள்ளான பகுதியை பிரதமர் மோடி நேரில் பார்வையிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒடிசாவின் பாலாசோர் மாவட்டம் பகனாகா பஜார் அருகே பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றபோது எதிர்பாராத விதமாக அந்த ரெயில் தடம் புரண்டது. தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்ட அந்த ரெயிலின் பெட்டிகள் சில அருகில் இருந்த தண்டவாளத்தில் விழுந்தது.
 அப்போது, அந்த தண்டவாளத்தில் சென்னை நோக்கி வேகமாக வந்த  கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்ட பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் மீது அதிவேகமாக மோதியது.  இதைத்தொடர்ந்து தடம் புரண்ட பெட்டிகள் மீது அந்த வழியாக வந்த சரக்கு ரயில் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.  இந்த கோர விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 35 பேர் பலியாகியுள்ளதாக தமிழக வருவாய்த்துறை செயலாளர் குமார் ஜெயந்த் கூறியுள்ளார். 

இந்நிலையில், ஒடிசாவில் ரயில் விபத்துக்குள்ளான பகுதியை பிரதமர் மோடி நேரில் பார்வையிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று ஒடிசா விரையும் பிரதமர் மோடி, ரயில் விபத்துக்குள்ளான ஒடிசாவின் பாலாசோர் மாவட்டம் பகனாகா பஜாருக்கு செல்கிறார். இதனை தொடர்ந்து ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள அனுமதிக்கப்பட்டுள்ள கட்டாக் மருத்துவமனைக்கு சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறுகிறார்.