நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது - பிரதமர் மோடி பேச்சு

 
modi

21ம் நூற்றாண்டில் உலகிற்கு புதிய திசையை காட்டுவதற்கான முக்கிய நேரம் இது என ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பேசியுள்ளார். 

இந்தியா தலைமை தாங்கும் ஜி-20 மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வருகிறாது. இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் பொருளாதாரம் மேம்பாடு, காலநிலை மாற்றம், எரிசக்தி விவகாரம் ,சர்வதேச கடன் கட்டமைப்பு, சீர்திருத்தம், கிரிப்டோ கரன்சி மீதான கட்டுப்பாடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.  இந்தியா வந்துள்ள ஜி-20 தலைவர்களுக்கு நேற்று இரவு சுவையான இந்திய சைவ உணவு பரிமாறப்பட்டது. இந்த நிலையில், ஜி20 மாநாடு டெல்லியில் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி துவக்க உரையாற்றினார். 

modi

ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி உலக தலைவர்கள் மத்தியில் பேசியதாவது:  21ம் நூற்றாண்டில் உலகிற்கு புதிய திசையை காட்டுவதற்கான முக்கிய நேரம் இது. பழைய பிரச்சனைகளுக்கு புதிய தீர்வை தேடி பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டிய  நேரம் இது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது. நம்மால் கொரோனாவையே தோற்கடிக்க முடிகிறது என்றால் போர் பிரச்சனையில் இருந்தும் வெற்றி பெற முடியும். வடக்குக்கும் தெற்குக்கும் இடையிலான பிளவு, கிழக்குக்கும் மேற்குக்கும் இடையிலான தூரம், உணவு மற்றும் எரிபொருள் மேலாண்மை, பயங்கரவாதம், சுகாதாரம், எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் உறுதியான தீர்வைக் காண வேண்டும். இவ்வாறு கூறினார்.