தமிழ்நாட்டின் செங்கோல் நமக்கு ஊக்கம் அளிக்கும் - பிரதமர் மோடி பேச்சு

 
PM Modi

தமிழ்நாட்டின் செங்கோல் நம் அனைவருக்கும் ஊக்கம் அளிக்கும் என புதிய நாடாளுமன்றம் திறப்பு விழாவில் பிரதமர் மோடி கூறியுள்ளார். 

நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழா தேசிய கீதத்துடன்  தொடங்கியது. முன்னதாக விழாவிற்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் பல்வேறு மாநில முதலைமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி 75 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார். நமது நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவுபெற்றதை நினைவுகூறும் வகையில்  75 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார். இதேபோல் புதிய நாடாளுமன்றம் திறப்பு விழாவை நினைவு கூறும் வகையில் புதிய தபால் தலைகளையும் வெளியிட்டார்.

Pm modi

இதனை தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது: புதிய நாடாளுமன்றத்தை திறந்த இந்த நாள் வரலாற்று சிறப்புமிக்கது. இது வெறும் கட்டிடம் அல்ல. இந்திய மக்களின் கனவுகளை பிரதிபலிக்கிறது. இது ஜனநாயகத்தின் ஆலயமாக விளங்கும். புதிய பாதைகளில் பயணம் செய்வதே புதிய குறிக்கோள்களை அடைய முடியும். உலகமே இந்தியாவை உற்று நோக்குகிறது. இந்தியா முன்னேறினால் உலகமே முன்னேறும். பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் போதிய வசதிகள் இல்லை. தமிழ்நாட்டின் செங்கோல் நம் அனைவருக்கும் ஊக்கம் அளிக்கும். செங்கோல் தற்போதுதான் சரியான்ன இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. நீதி, நல்லாட்சியின் அடையாளம் செங்கோல். சோழர் காலத்தில் நீதி மற்றும் நல்லாட்சியின் அடையாளமாக செங்கோல் விளங்கியது. புனிதமான செங்கோலின் பெருமையை மீட்டெடுக்க முடிந்தது நமது அதிர்ஷ்டம். 900 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் ஜனநாயக பாரம்பரியம் கடைபிடிக்கப்பட்டது. ஆங்கிலேயர் காலத்தில் அதிகாரப்பகிர்வுக்கு பயன்படுத்தப்பட்ட செங்கோலுக்கு உரிய மதிப்பு அளித்துள்ளோம்.  புதிய நாடாளுமன்ற வளாக அனைத்து இந்தியர்களுக்கும் பெருமிதம் அளிக்கும். புதிய நாடாளுமன்றம் தொழில்நுட்பத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது. 9 ஆண்டுகளில் எழை மக்களின் வாழ்க்கை தரம் மேம்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றம் ஏழை, எளிய மக்களின் குரலாக ஒலிக்கும். இவ்வாறு கூறினார்.