"பஹல்காம் அட்டாக்... ரத்தம் கொதிக்கிறது"- பிரதமர் மோடி ஆவேசம்

 
மோடி மோடி

பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு நிச்சயம் தக்க பதிலடி கொடுப்போம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மன்-கி-பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “ஜம்மு காஷ்மீரில் 26 பேர் கொல்லப்பட்ட பஹெல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான பதிலடி உண்டு. பஹெல்காம் தீவிரவாத தாக்குதலால் தேசமே துக்கத்தில் உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும். அப்பாவிகளின் உயிர்களை எடுத்தவர்களை பழி தீர்க்காமல் இந்தியா ஓயாது. பயங்கரவாதிகள் கொடூரமான பதிலடியை எதிர் கொண்டே ஆக வேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிராக 140 கோடி இந்தியர்களுடன் உலக நாடுகள் கரம் கோர்த்துள்ளன. பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு நிச்சயம் தக்க பதிலடி கொடுப்போம். பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல், ஒவ்வொரு இந்திய குடிமகனையும் காயப்படுத்தி உள்ளது. தாக்குதலின் படங்களை பார்த்து ஒவ்வொரு இந்தியனின் ரத்தமும் கொதித்துக் கொண்டிருப்பதை என்னால் உணர முடிகிறது. பஹல்காமில் நடந்த தாக்குதல் பயங்கரவாத ஆதரவாளர்களின் விரக்தியை காட்டுகிறது. காஷ்மீர் மீண்டும் அழிக்கப்பட வேண்டும் என்று பயங்கரவாதிகளும், அதன் மூளையாக செயல்படுபவர்களும் விரும்புகின்றனர். பயங்கரவாதத்திற்கு எதிரான  போரில், 140 கோடி இந்தியர்களின் ஒற்றுமையே நமது மிகப்பெரிய பலம்.” என்றார்.