இந்தியாவில் ஒமிக்ரான் அச்சுறுத்தல் - பிரதமர் மோடி நாளை ஆலோசனை!!

 
modi

தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் தொற்று  தற்போது உலக நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.  இந்தியாவில் ஒட்டுமொத்தமாக ஒமிக்ரான்  பாதிப்பானது 220ஐ கடந்துள்ளது. மகாராஷ்டிராவில் நேற்று புதிதாக 11 பேருக்கு ஒமிக்ரான் உறுதிசெய்யப்பட்ட நிலையில், மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. அதேப்போல் புதிதாக ஜம்மு காஷ்மீர் மற்றும் ஒரிசாவில் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

corona

தெலுங்கானாவில் 24  பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 200க்கும் மேற்பட்டோர் தொற்று பரவியுள்ளது.  இருப்பினும் 77 பேர் குணமாகி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது ஆறுதல் அளிக்கக் கூடியதாக உள்ளது. இருப்பினும் அனைத்து மாநிலங்களிலும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநிலங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.  அதில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை வேகப்படுத்தவும்,  கொரோனா  கட்டுப்பாடு நடவடிக்கைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

modi

இந்நிலையில் ஒமிக்ரான் தொற்று  நாடு முழுவதும் தீவிரமாக பரவத் தொடங்கி உள்ள நிலையில் பிரதமர் மோடி நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.  ஒமிக்ரான் தொற்றை கட்டுப் படுத்த செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசிக்க உள்ளதாகவும் , மாநிலங்களில் எடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.