போருக்கு பிறகு முதன்முறையாக உக்ரைன் செல்லும் பிரதமர் மோடி.. எப்போ தெரியுமா?

 
 போருக்கு பிறகு முதன்முறையாக உக்ரைன் செல்லும் பிரதமர் மோடி.. எப்போ தெரியுமா?  போருக்கு பிறகு முதன்முறையாக உக்ரைன் செல்லும் பிரதமர் மோடி.. எப்போ தெரியுமா?

பிரதமர் மோடி வரும் ஆகஸ்ட் 23ம் தேதி உக்ரைன் நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியது.  2 ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் போர் முடிவுக்கு வந்தபாடில்லை. இரு நாடுகளுக்கும் இடையேயான போரை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனாலும் எந்த நாட்டுக்கும் தனது ஆதரவை தெரிவிக்கவில்லை.  இந்த நிலையில்  பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டாணி வெற்றி பெற்று பிரதமர் மோடி 3வது முறையாக ஆட்சியமைத்த பின்னர் முதல் பயணமாக ரஷ்யா சென்றார். 

இந்த பயணம் சர்வதேச அளவில் பேசுபொருளானதுடன் , விமசனங்களும் எழுந்தன.  பிரதமர் மோடியின் ரஷ்ய பயணத்தின் போது, அவருக்கு அந்நாட்டின் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் செயிண்ட் ஆண்ட்ரூ தி அபோஸ்டிஸ் விருது வழங்கப்பட்டது. புதின் வழங்கிய விருதை பெற்றுக்கொண்டு பிரதமர் மோடியும், புதினும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வெளியாகின. 

பிரதமர் மோடி - விளடிமிர் புதின்

இதனைக் குறிப்பிட்டு அப்போதே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது அதிருப்தியை தெரிவித்திருந்தார். அவர் தனது எக்ஸ் பதிவில், “உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய கொடூரமான ஏவுகணைத் தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 37 பேர் கொல்லப்பட்டனர். 13 குழந்தைகள் உட்பட 170 பேர் காயமடைந்தனர். உக்ரைனில் உள்ள மிகப்பெரிய குழந்தைகள் மருத்துவமனையை ரஷ்ய ஏவுகணை தாக்கியது. பலர் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்திருக்கின்றனர். ஆனால், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர், உலகின் மிக ரத்தம் தோய்ந்த குற்றவாளியை மாஸ்கோவில் கட்டிப்பிடித்ததைப் பார்ப்பது, அமைதி முயற்சிகளுக்கு பெரும் ஏமாற்றமும் பேரழிவு தரும் படியுமாகும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.  

இந்த நிலையில் உக்ரைன் நாட்டுக்கு பிரதர் மோடி அரச முறை பயணமாக வருகிற ஆக்ஸ்ட் 23ம் தேதி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் - ரஷ்யா போருக்குப் பிறகு முதல்முறையாக அவர் உக்ரைனுக்கு செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  
.