மன்மோகன் சிங் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் - மோடி ட்வீட்!!

 
manmohan singh

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.

modi

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு பாதிக்கப்பட்டார். கடந்த ஏப்ரல் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர்,  டெல்லி  எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமாகினார். இந்த சூழலில் உடல்நலக் குறைபாட்டின் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவரது  உடல்நிலை சீராக இருப்பதாகவும், தேவையான ஊட்டச்சத்து, திரவ உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில்  பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் குணமடைந்து நல்ல உடல்நலம் பெற பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.89 வயதான மன்மோகன் சிங்கிற்கு கடந்த 2009-ம் ஆண்டு  இதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

.