இயற்கையை பாதுகாக்கும் தூத்துக்குடி மக்கள் - பிரதமர் மோடி பாராட்டு!!

 
modi

இயற்கையை பாதுகாப்பதில் தூத்துக்குடி மக்களுக்கு முக்கிய பங்கு உள்ளதாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

modi

ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமை மன் கி பாத் நிகழ்ச்சி வாயிலாக பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் நவம்பர் மாதத்திற்கான கடைசி ஞாயிற்றுக் கிழமையான இன்று 83வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.  அப்போது பேசிய அவர், நாட்டின் ஆயுதப் படைகளை நான் நினைவுகூர்கிறேன்.நம்முடைய துணிச்சலான இதயங்களை நான் நினைவுகூர்கிறேன். குறிப்பாக, அத்தகைய துணிச்சலான இதயங்களைப் பெற்றெடுக்கும் துணிச்சலான தாய்மார்களை நான் நினைவில் கொள்கிறேன். 1971-ம் ஆண்டு பொன்விழா ஆண்டை வரும் டிசம்பர் 16ஆம் தேதி கொண்டாட இருக்கிறோம். இந்த தருணத்தில் தைரியமிக்க நமது வீரர்களை நினைத்து நான்  பெருமை படுவதுடன் அவர்களை நினைத்து அவர்களை வணங்குகிறேன். சுதந்திர பொன்விழா ஆண்டில் நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருவது நமக்கு தெரிகிறது. சுதந்திர பொன்விழா ஆண்டில் பழங்குடியினரின் பங்கை கருத்தில் கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

modi

தொடர்ந்து பேசிய அவர்,  இயற்கையை நாம் பாதுகாத்தால் அது நம்மை பாதுகாக்கும் .பல்வேறு கடலோரப் பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ளது . தூத்துக்குடி மக்கள் தீவுகள் மற்றும் திட்டுகளில் பனைமரங்களை நடுகின்றனர். இந்த பனை மரங்கள் புயல் மற்றும் சூறாவளி காலங்களிலும் உறுதியுடன் இருக்கின்றன . இந்த முறையில் இந்த பகுதியை பாதுகாப்பதற்கான புதிய நம்பிக்கை நமக்கு பிறந்துள்ளது. இயற்கையின் சமநிலையை சீர்குலைக்கும் போது அல்லது அதன் புனிதத்தை நாம் அழிக்கும்போது இயற்கை நமக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.  இயற்கை நம்மை ஒரு தாயைப்போல வளர்த்து நம் உலகத்தை பிரகாசமான வண்ணங்களால் நிரப்புகிறது. நாம் இயற்கையை பாதுகாக்கும் போது,  இயற்கையும் நம்மை பாதுகாக்கும் இப்படிப்பட்ட ஒரு எடுத்துக்காட்டை தமிழ்நாட்டு மக்கள் பரந்துபட்ட அளவிலேயே வெளிப்படுத்தி இருக்கிறார்கள்" என்றார்.