பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு..!!

 
Ghana President - PM Modi Ghana President - PM Modi

அரசு முறை பாயணமாக கானா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு., மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் தேசிய மரியாதையாக கடுதப்படும் விருதை வழங்கி  அந்நாட்டு அரசு கௌரவித்துள்ளது.  

பிரதமர் மோடி 8 நாட்கள் பயணமாக உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.  இந்த பயணத்திட்டத்தில் கானா, டிரினிடாட் அண்ட் டுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு பிரதாமர் மோடி செல்கிறார். அத்துடன் பிரேசிலில் நடைபெறும் ‘பிரிக்ஸ்’ மாநாட்டிலும் பங்கேற்கிறார்.  இதற்காக நேற்று  டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடி, முதல்கட்டமாக கானா நாட்டுக்குச் சென்றார்.  

modi

கானா அதிபர் ஜான் டிரமனி மஹாமா அழைப்பின்பேரில்  அங்கு சென்ற பிரதமர் மோடிக்கு, கோடகா விமான நிலையத்தில் மோடிக்கு இந்தியர்கள்  சார்பில் உற்சாக வரவேர்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியை கைக்குலுக்கி உற்சாகமாக வரவேற்றார் அதிபர் ஜான் டிரமனி மஹாமா.  இந்நிலையில் இன்று  கானாவில் பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான ‘ஆபிஸ் ஆட் தி ஆர்டர் ஆப் தி ஸ்டார் ஆப் கானா விருது’(The Officer of the Order of the Star of Ghana) வழங்கி கௌரவிக்கப்பட்டது.  கானா அதிபர் ஜான் தர்மனி மஹாவாவிடம் இருந்து இந்த விருதை பிரதமர் மோடி பெற்றுக்கொண்டார். இந்தவிருது மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் தேசிய மரியாதையாக கருதப்படுகிறது.