“ஒரே நாடு ஒரே வரி கனவு நனவாகியுள்ளது”- பிரதமர் மோடி

 
“ஒரே நாடு ஒரே வரி கனவு நனவாகியுள்ளது”- பிரதமர் மோடி “ஒரே நாடு ஒரே வரி கனவு நனவாகியுள்ளது”- பிரதமர் மோடி

நேரடி அந்நிய முதலீட்டை ஜிஎஸ்டி வரி குறைப்பு ஈர்க்கும், சமூகத்தின் அனைத்து பிரிவை சேர்ந்த மக்களுக்கும் ஜிஎஸ்டி வரி குறைப்பு பயனளிக்கும் என பிரதமர் மோடி கூறினார். 

நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, “தொடர்புடைய அனைவருடனும் ஆலோசனை நடத்தி கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டி மாற்றத்தால் ஒரே நாடு ஒரே வரி கனவு நனவாகியுள்ளது. வரி குறைப்பு நாட்டின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும், முதலீடுகளை ஊக்குவித்து வளர்ச்சியை அதிகரிக்கும். வருமான வரிச்சலுகை, ஜிஎஸ்டி ட்வரி குறைப்பால் இந்தாண்டு ரூ.25 லட்சம் கோடி வரை செலவு குறையும். உள்நாட்டு தயாரிப்புகளை பயன்படுத்த ஆரம்பித்தால் இந்தியா வேகமாக வளர்ச்சி அடையும். நேரடி அந்நிய முதலீட்டை ஜிஎஸ்டி வரி குறைப்பு ஈர்க்கும், சமூகத்தின் அனைத்து பிரிவை சேர்ந்த மக்களுக்கும் ஜிஎஸ்டி வரி குறைப்பு பயனளிக்கும், நாட்டின் பொருளாதாரத்துக்கு புதிய உத்வேகத்தை 'ஜி.எஸ்.டி. 2.0' கொடுக்கும்” என்றார்.