முதல்வர் வீட்டின் முன்பாக கஞ்சா விற்ற போலீசார்

 
க்

முதலமைச்சரின் வீட்டின் முன்பாக அதுவும் முதலமைச்சருக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கஞ்சா விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.   கர்நாடக மாநிலத்தில் தான் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

 அம்மாநிலத்தில் பெங்களூரு கோரமங்களா காவல்நிலையத்தில் சந்தோஷ், சிவக்குமார் ஆகியோர் காவலர்களாக பணியாற்றி வந்திருக்கிறார்கள்.  இவர்கள் இருவரும் அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மையின் வீட்டின் முன்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள்.  

பொ

 முதலமைச்சர் வீட்டின் அருகே உள்ள சர்க்கிள் பகுதியில் ஒய்சாலா போலீசார் ரோந்து சென்று இருக்கிறார்கள்.  அப்போது அங்கு சிவகுமாரும் சந்தோசும் இரண்டு பேருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் சிவக்குமார் - சந்தோஷ் மற்ற 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரித்துள்ளனர்.  அப்போது சிவக்குமாரும் சந்தோசும் சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும்,  அந்த இரண்டு பேரிடம்  கஞ்சா விற்ற பணத்தை தராததால் அவர்களிடம் இரண்டு பேரும் தகராறு செய்து வந்ததாக தெரிய வந்திருக்கிறது. 

இதனால் அந்த 4 பேரையும்  ஒய்சாலா போலீசார் பிடித்து ஆர். டி. நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இருக்கிறார்கள்.  அங்கு சிவகுமாரும் சந்தோஷிடமும் ஆர். டி. நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தியபோது பிரபல கஞ்சா விற்பனையாளர்களிடம் இருந்து கொஞ்சம் வாங்கி வந்து ரெண்டு பேரும் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

க்

 இதன்பின்னர் கோரமங்களா போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு தொடர்புகொண்டு,   ஆர். டி. நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள்  சிவக்குமார் -சந்தோசை கஞ்சா விற்பனை செய்த வழக்கு தொடர்பாக பிடித்து வைத்துள்ளோம் என்று கூறியிருக்கிறார்கள்.  உடனே கோரமங்களா போலீசார் அவர்கள் 2 பேரிடமும் நிறைய முறை கஞ்சா விற்பனை ஈடுபடவேண்டாம் என்று தெரிவித்து இருந்தேன்.  ஆனால் அவர்கள் கேட்கவில்லை . அதனால் அவர்கள் மீது சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்.

 இதையடுத்து சந்தோஷ் மற்றும் சிவக்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.   அவர்களிடமிருந்து கஞ்சா வாங்கி விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசையில் தான் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக சந்தோஷும் சிவகுமாரும் தெரிவித்துள்ளனர்.   கைதான 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  முதல்வரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.