தலைநகர் பெயரை மாற்றிய மத்திய அரசு- அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அமித்ஷா

 
அமித்ஷா

அந்தமான் நிக்கோபாரின் தலைநகரம் போர்ட் பிளேயரின் பெயர் ஸ்ரீ விஜயபுரம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அமித்ஷா

அந்தமான் நிகோபார் தீவுகளின் தலைநகரமான 'Port Blair' - 'ஸ்ரீ விஜய புரம்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நாட்டை காலனி ஆதிக்கத்தின் சுவடுகளில் இருந்து விடுவிக்கும் விதமாக அந்தமான் நிக்கோபார் தலைநகரின் பெயர் ஸ்ரீ விஜயபுரம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும்,  ஒரு காலத்தில் சோழப் பேரரசின் கடற்படை தளமாக விளங்கிய தீவுப் பகுதி, இன்று நமது வளர்ச்சிக்கு முக்கிய தளமாக விளங்குகிறது என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். நமது சுதந்திரப் போராட்டத்திலும், சரித்திரத்திலும் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு இணையற்ற இடம் உண்டு என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.




ஸ்ரீ விஜய புரம் எனும் பெயர் சுதந்திர போராட்டத்தின்போது வெற்றியை குறிப்பதாக அமித்ஷா விளக்கம் ளிடததுள்ளார்.