“லட்டு சர்ச்சை- நான் சொன்னதை தவறாக புரிந்து கொண்டுவிட்டீர்கள்”... பவன்கல்யாணுக்கு பிரகாஷ் ராஜ் பதில்
திருப்பதி லட்டு விவகாரம் நடிகர் பிரகாஷ்ராஜ் எக்ஸ் பதிவுக்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கண்டனம் தெரிவித்த நிலையில் வெளிநாட்டில் சினிமா படப்பிடிப்பில் இருப்பதாகவும், நான் செய்த பதிவை மீண்டும் ஒருமுறை படிக்கவும் என நடிகர் பிரகாஷ்ராஜ் வீடியோ வெளியிட்டுள்ளார்.
திருப்பதியில் லட்டு குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் இரண்டு தினங்களுக்கு முன்பு எக்ஸ் பதிவில் அன்புள்ள பவன் கல்யாண் நீங்கள் துணை முதல்வராக ஆக இருக்கும் நிலையில் இது நடந்துள்ளது.. தயவு செய்து விசாரணை செய்யுங்கள் குற்றவாளிகளை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுங்கள். நீங்கள் ஏன் இதனை பரப்புகிறீர்கள் மற்றும் தேசிய அளவில் பிர்ச்சினையை ஊதிப் பெரிதாக்குகிறீர்கள். நாட்டில் போதுமான வகுப்புவாத பதட்டங்கள் உள்ளன. மத்தியில் உள்ள உங்கள் நண்பர்களுக்கு நன்றி என பதிவு செய்தார். இதற்கு துணை முதல்வர் பவன் கல்யாண் பிரகாஷ்ராஜ் குறித்து பேசுகையில் வேற்று மதம் குறித்து ஏதாவது சர்ச்சை நடந்தால் கேள்வி எழுப்பும் பிரகாஷ்ராஜ் இந்து மக்களுக்கும் சனாதனம் குறித்து ஏதாவது விவாதம் ஏன்றால் நாங்கள் பேசக்கூடாதா ? எங்களை ஏன் கேள்வி எழுப்ப கூடாது என கூறுகிறீர்கள் சனதனம் காப்பாற்றுவதற்காக நான் எனது உயிரை கொடுக்கவும் தயார் என அவர் பேசி இருந்தார்.
இந்நிலையில் இந்த வீடியோவை பார்த்த நடிகர் பிரகாஷ்ராஜ் அவரும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். இதில் நீங்கள் பேசிய பிரஸ்மீட் வீடியோ காட்சிகளை இப்பொழுது பார்த்தேன். வெளிநாட்டில் சூட்டிங்கில் இருக்கிறேன். வரும் 30-ஆம் தேதி இந்தியா வருகிறேன், அங்கு வந்த பிறகு நீங்கள் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் நான் விவரமாக பதில் அளிக்கிறேன். நேரம் இருந்தால் நான் போட்ட பதிவை மீண்டும் ஒருமுறை படிக்கவும் என அவர் பதிவு செய்துள்ளார்.