பிரசாந்த் கிஷோரை கிறுகிறுக்க வைத்த கருத்துக்கணிப்பு!
பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி 0-5 இடங்களைப் பெறக்கூடும் என கருத்துக் கணிப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

பீகாரின் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (பாஜ - ஜேடியூ), மகாகத்பந்தன் கூட்டணி (காங் - ஆர்.ஜே.டி.), பிரபல தேர்தல் வியூகவாதியான பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ், தேஜஸ்வி யாதவ் சகோதரரின் கட்சி, அசாதுதின் ஒவைசி என பலமுனைப் போட்டி நிலவியது. இதில் பல தொகுதிகளில் தேஜகவுக்கும் மகாகத்பந்தனுக்கும் இடையே நேரிடை போட்டி நிலவியது. இந்நிலையில் நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், தற்போது பீகாரில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. அதன்படி பீகாரில், இந்த முறையும் பாஜகவே ஆட்சியைத் தக்கவைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பீகாரில் வெற்றி பெற்று ஜன் சுராஜ் கட்சி தனிப்பெரும்பானையுடன் ஆட்சியமைக்கும் அல்லது எதிர்க்கட்சி வரிசையில் அமர்வோம், ஒரு வேளை தற்போது நடக்கும் NDA ஆட்சியை மாற்ற விரும்பவில்லை என்றால் அடுத்த 5 ஆண்டுகள் மக்களுடன் பயணிப்போம், ஆனால் கூட்டணி ஆட்சியில் இடம் பெற மாட்டோம் என அரசியல் வியூகவாதி பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி 0-5 இடங்களைப் பெறக்கூடும் என கருத்துக் கணிப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. பிமார்க் (PMARQ) கருத்துக்கணிப்பின்படி,
ஜன் சுராஜ் : 1-4 இடங்களையும், சாணக்யா ஸ்ரேட்ஜிஸஸ் (chanakya strategies) கருத்துக்கணிப்பின்படி, ஜன் சுராஜ் : 0-0, டிவி ரீசர்ச் (TV Research) கருத்துக்கணிப்பின்படி, ஜன் சுராஜ் : 2-4 தொகுதிகளையும், ஜேவிசி’ஸ் போல் (JVC's Poll) நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பின்படி, ஜன் சுராஜ் : 0-1 தொகுதிகளை மட்டுமே வெல்லும் என தெரியவந்துள்ளது. டைனிக் பாஸ்கர் (Dainik Bhaskar) நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பின்படி, ஜன் சுராஜ் : 0-0, மேட்ரிஜ் (Matrize) கருத்துக்கணிப்பின்படி, ஜன் சுராஜ் : 0-2 தொகுதிகளையும், பீப்பிள்ஸ் பல்ஸ் (People's Pulse) மற்றும் பீப்பிள்ஸ் இன்சைட் (People's Insight) நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்பின் படி ஜன் சுராஜ் : 0-5, ஜன் சுராஜ் : 0-2 இடங்களை மட்டுமே பிடிக்கும் என தெரியவந்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் அரசியல் வியூகவாதி என வலம்வரும் பிரசாந்த் கிஷோருக்கு பீகார் அரசியலில் மிகப்பெரிய அடி விழுந்துள்ளது என்றே அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.


