75 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி!

 
pm modi

புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி 75 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார்.

இந்தியாவின் தற்போதைய பாராளுமன்ற கட்டிடம், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஆகையால் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்ட முடிவு செய்த மத்திய அரசு ,ராஜபாதை சீரமைப்பு , துணை  குடியரசுத் தலைவர் இல்லம், பிரதமர் இல்லம், மத்திய செயலகம் உள்ளிட்டவை அடங்கிய அடங்கிய புதிய பாராளுமன்ற கட்டிடத்தைக் கட்டியுள்ளது. சென்டிரல் விஸ்டா திட்டத்தின் ஒரு அங்கமாக  கட்டப்பட்டு வரும், இதற்கு கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். நாடாளுமன்ற புதிய கட்டிடத்தின் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், பிரதமர் மோடி சற்று நேரத்தில் திறந்து வைக்கிறார்.  திறப்பு விழாவுக்கான சிறப்பு பூஜை இன்று காலை நடைபெற்றது. கிறிஸ்தவம், இஸ்லாமியம், பௌத்தம் உள்ளிட்ட  அனைத்து குருமார்கள் வழிபாடும் நடைபெற்றது.  இதன் தொடர்ச்சியாக சோழர்களின் பொற்காலத்திற்கு சாட்சியாக விளங்கும் செங்கோலை , தமிழக ஆதீனங்கள் 21 பேரும் பிரதமர் மோடியிடம் வழங்கினர்.  அதன்பிறகு,  சபாநாயகர் இருக்கைக்கு அருகில் உள்ள கண்ணாடி பெட்டிக்குள் சோழர்கால செங்கோலை நிறுவினார் பிரதமர் மோடி.  

இதனிடையே  நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழா தொடங்கியது. தேசிய கீதத்துடன் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழா தொடங்கியது. முன்னதாக விழாவிற்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் பல்வேறு மாநில முதலைமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி 75 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார். நமது நாடு சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகள் ஆனதை நினைவுகூறும் விதமாக 75 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார். இதேபோல் நாடாளுமன்ற கட்டட திறப்பை நினைவு கூறும் தபால் தலையையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.