விஜய் திவாஸ் : போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி மரியாதை...

 
பிரதமர் மோடி

விஜய் திவாஸ் 50வது ஆண்டு பொன்விழாவையொட்டி டெல்லியில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
1971ல் இந்தியா-  பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரில் இந்தியா மாபெரும் வெற்றியைப் பெற்றது.    அன்று மாலை  4.21 மணிக்கு இதே நாளில்தான் (16. 12 .1971)   நிபந்தனையற்ற போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த போரில் பாகிஸ்தான் வீரர்கள் 93 ஆயிரம் பேர் இந்தியாவிடம் சரணடைந்தனர். அதனைத்தொடர்ந்து உயிர் தியாகம் செய்த வீரர்களை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 16-ஆம் தேதி ’விஜய் திவாஸ்’ அனுசரிக்கப்படுகிறது.

போர் நினைவு சின்னம்

போரில் இந்தியா வெற்றிபெற்று 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, இன்று பொன்விழா  கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து பார்வையாளர்கள் பதிவேட்டில்  அவர் கையெழுத்திட்டார்.  மேலும் , 1971 ஆம் ஆண்டு போரில் ஈடுபட்ட வீரர்களுக்கு ஒட்டுமொத்த தேசத்தின் சார்பாக தலைவணங்குகிறேன். ஈடு இணையற்ற வீரக் கதைகளை எழுதிய,  வீரர்களை நினைத்து  நாட்டு மக்கள்  பெருமிதம் கொள்கிறார்கள்...” என்று குறிப்பிட்டிருந்தார்.

போர் நினைவு தினம் - பிரதமர் மோடி