உ.பி.யின் உணர்வுள்ள மக்களை நினைத்து பெருமைப்படுகிறேன் - பிரியங்கா காந்தி

 
Priyanka Priyanka

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் உத்தர பிரதேச தொகுதியில் காங்கிரஸ் கட்சியானது  6 தொகுதிகளில் வெற்றிகண்டது. இந்தியா  கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியான சமாஜ்வாடி கட்சி 37 இடங்களில் வென்றது. இதன் மூலம் உத்தரபிரதேச வெற்றியால் இண்டியா கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியது.

இந்நிலையில் பிரியங்கா காந்தி தனது சமூகவலைத்தள பக்கத்தில், உத்தரப்பிரதேச காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு எனது பாராட்டுக்கள்; கடினமான நேரங்களிலும் போராடும் துணிவைக் காட்டினீர்கள்;



நீங்கள் சித்திரவதை செய்யப்பட்டீர்கள், பொய் வழக்குகளுக்கு உள்ளாக்கப்பட்டீர்கள், சிறையில் அடைக்கப்பட்டீர்கள், ஆனாலும் நீங்கள் பயப்படவில்லை
தேர்தல் பொதுமக்களுடையது; போராடுவதும், வெற்றி பெறுவதும் பொதுமக்கள்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.