#Breaking "மாநில அரசுகள் விரும்பினால் மட்டுமே நீட் தேர்வு " - காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு

 
tn

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குறுதிகள் கொண்ட அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

tn

அவை பின்வருமாறு :-

  • நாடு முழுவதும் சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும்
  • 10 சதவீத இட ஒதுக்கீடு எந்த விதமான பாகுபாடுமின்றி அனைத்து சாதியினருக்கும் வழங்கப்படும்
  • அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒப்பந்த பணி முறை நீக்கப்படும் 
  • மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.1 லட்சம்
  • நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகள் வேண்டுமா? என்பதை மாநில அரசே முடிவு செய்து கொள்ளலாம்
  • விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்படும்

rahul

  • எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினருக்கான இட ஒதுக்கீடு 50%ல் இருந்து உயர்த்தப்படும்
  • புதுச்சேரி மற்றும் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்
  • மார்ச் 2024 வரை பெறப்பட்ட அனைத்து கல்விக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும்
  • பட்டியலின மாணவர்கள் மீதான துன்புறுத்தல்களைத் தடுக்க ரோஹித் வெமுலா சட்டம் இயற்றப்படும்!
  • மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் முறை அகற்றப்படும்
  • 2009ம் ஆண்டு காங்கிரஸ் அரசு கொண்டு வந்த கட்டாய கல்வி சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு, 12ம் வகுப்பு வரை கட்டாயக் கல்வி இலவசமாக வழங்க நடவடிக்கை