ஆந்திராவில் தேர்தல் கொண்டாட்டத்தில் நடந்த சோகம்- அதிர வைக்கும் காணொலி

 
டிராக்டர்

ஆந்திராவில் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் தெலுங்கு தேச கட்சி கூட்டணி வெற்றி பெற்றதை கொண்டாடி டிராக்டரை பின்னோக்கி ஓட்டி சென்று இளைஞர் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் தெலுங்கு தேச கட்சி, ஜனசேனா, பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பிடித்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக மேற்கு கோதாவரி மாவட்டம் தணுகு மண்டலம் வேல்புரு கிராமத்தில் முக்கிய சந்திப்பில் தெலுங்கு தேசம் கட்சியினர் வெற்றியை கொண்டாடினர். அப்போது டிராக்டரை பின்னோக்கி ஓட்டி சுற்று போட முயன்றபோது கட்சி கொடியை அசைத்து கொண்டாடிய ஒரு இளைஞட் டிராக்டரின் பின் சக்கரத்தின் கீழ் விழுந்தான். 


இதில் பலத்த காயமடைந்த அந்த இளைஞருக்கு இரண்டு கால்களும் முறிந்தன. உடனடியாக அவரை தனுகுவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னிருந்தவரை கவனிக்காமல் ட்ராக்டரை ரிவர்ஸ் எடுத்ததால், தொண்டர் மீது ட்ராக்டர் ஏறியது குறிப்பிடதக்கது.