குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு - ஏப்ரல் 29-ம் தேதி விசாரணை

 
rahul

அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்துள்ள நிலையில், அந்து மனு நாளை மறு தினம் விசாரணைக்கு வருகிறது.

கர்நாடக மாநிலம் கோலாரில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பரப்புரையின் போது, மோடி என்ற பெயர் உடையவர்கள் எல்லாம் திருடர்கள் தான் என ராகுல் காந்தி பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கில் மார்ச் 23ம் தேதி  தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஹெச்.ஹெச். வர்மா,   ராகுல் குற்றவாளி என அறிவித்ததோடு அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தார். அத்துடன்   மேல்முறையீடு செய்ய ஏதுவாக 2  ஆண்டுகள் சிறை தண்டனையை ஒரு மாதத்திற்குள் நிறுத்தி வைத்ததுடன்,  ஜாமீனும் வழங்கி இருந்தார். சிறை தண்டனை விதிக்கப்பட்டதன் காரணமாக ராகுல் காந்தியின் எம்.பி.பதவியும் பறிக்கப்பட்டது.  

rahul gandhi

இதனையடுத்து  சூரத் மாவட்ட கூடுதல் செஷன்ஸ்  நீதிமன்றத்தில் ஆஜராகி ராகுல் காந்தி  மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். கடந்த 13ஆம் தேதி ராகுல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.எஸ்.எஸ் சீமா இந்த வழக்கில், இந்த வழக்கில் விசாரணை நேர்மையாக நடக்கவில்லை என்றும் அதிகபட்ச தண்டனை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் பாதித்தார். இந்நிலையில், இந்த வழக்கு கடந்த 20ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க சூரத் மாவட்ட செஹன்ஸ் நீதிமன்றம் மறுத்து விட்டது. மேலும் ராகுல்காந்தியின் மனுவை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு வருகிற 29ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என குஜராத் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.