செப். 3-ம் தேதி பாரத் ஜோடோ யாத்திரை 2.0 தொடக்கம்

 
டெல்லிக்கு சென்றது ராகுல் காந்தியின் பாத யாத்திரை..  தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..

செப்டம்பர் 3-ம் தேதி உதல் பாரத் ஜோடோ யாத்திரையின் இரண்டாம் கட்டத்தை ராகுல்காந்தி தொடங்க இருப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. 

Rahul Gandhi to undertake 2nd leg of Bharat Jodo Yatra from Gujarat to  Meghalaya | Latest News India - Hindustan Times

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி  பாரத் ஜோடோ யாத்திரை எனப்படும் இந்திய ஒற்றுமைக்கான நடைபயணத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி தொடங்கினார். கன்னியாகுமரியில் தொடங்கிய பாரத் ஜோடா யாத்திரை 3,750 கிலோமீட்டர் கடந்து 136 நாட்களுக்கு பின் ஸ்ரீநகரில்  ஜனவரி 30 ஆம் தேதி நிறைவுபெற்றது.  9 மாநிலங்களை கடந்த ஒற்றுமை நடைபயணத்தின் போது , காவல்துறை பாதுகாப்பு முழுமையாக வழங்கப்பட்டிருந்தது. 

Rahul Gandhi, Bharat Jodo Yatra: 3,000 Km Covered, Rahul Gandhi's Bharat  Jodo Yatra Enters UP Today

இதனிடையே நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ராகுல்காந்தி எம்பி, தனது யாத்திரை இன்னும் முடியவில்லை. நடைபயணத்திபோது நிறைய பாடங்களை கற்றுக்கொண்டேன் என நெகிழ்ச்சியுடன் பேசினார். இந்நிலையில் செப்டம்பர் 3-ம் தேதி உதல் பாரத் ஜோடோ யாத்திரையின் இரண்டாம் கட்டத்தை ராகுல்காந்தி தொடங்க இருப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.  நாட்டின் மேற்கு பகுதியான குஜராத் மாநிலத்தில் தொடங்கி, கிழக்கு பகுதியான மேகாலயா மாநிலம் வரை ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார்.