ராகுல் காந்தி மேல்முறையீடு - குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

 
tn

ராகுல் காந்தி மேல்முறையீட்டு வழக்கில் குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பிரச்சாரத்தின் போது மோடி சமூகம் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக  சூரத் பெருநகர மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற நிலையில் இரண்டு ஆண்டுகள் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது . அத்துடன் அவர் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து கடந்த ஏப்ரல் மூன்றாம் தேதி சூரத் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார். 

Rahul

தனக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைக்க கோரி ஒரு மனுவும்,  மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வரும் வரை குற்றவாளி என்று அறிவித்த நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க கோரி மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த இரண்டு மனுக்களையும் விசாரித்த நீதிமன்றம் ராகுல் காந்திக்கு ஜாமின் வழங்கியது.  தனக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைதாண்டனை ரத்து செய்யக்கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு தாக்கல் செய்தார். அத்துடன் அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு தண்டனைக்கு தடைக்கோரிய   வழக்கில்,  2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க குஜராத் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததோடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.  இதன் காரணமாக தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்க மறுத்து குஜராத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். அதன்படி  ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில்  நீதிபதிகள் பி.ஆர்.கவாய் , பி.கே.மிஸ்ரா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

supreme court

இந்நிலையில் ராகுல்காந்தியின் மேல்முறையீடு மனுவுக்கு பதில் அளிக்க புர்னேஷ் மோடிக்கும், குஜராத் அரசுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைக்க கோரிய மேல்முறையீடு மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.