'கிரகலட்சுமி' திட்டத்தை தொடங்கி வைக்கிறார் ராகுல்காந்தி

 
Rahul

கர்நாடக சட்டசபை தேர்தலில் ஆட்சியைப் பிடித்துள்ள காங்கிரஸ் கட்சி பல்வேறு வாக்குறுதிகளை முன்னிறுத்தி தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றது. அதில் கிரக ஜோதி என்னும் இலவச 200 அலகு மின்சார திட்டம்,  கிரகலட்சுமி என்னும் குடும்ப தலைவிகளுக்கு 2000 மாதம் வழங்கும் திட்டம் உள்ளிட்டவை அடங்கும்.

karnataka election congress

அந்த வகையில் கிரக ஜோதி திட்டம் கடந்த 1ம் தேதி தொடங்கிய நிலையில் கிரகலட்சுமி திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பிபிஎல் ,ஏபிஎல், ரேஷன் கார்டு வைத்துள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2000 நிதி உதவி பெறும் கிரகலட்சுமி திட்டம் பெரும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.  குடும்பத்தில் யாராவது வருமான வரி ,ஜிஎஸ்டி கட்டுபவர்கள் இருந்தால் அவர்களுக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

rahul

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தேர்தல் வாக்குறுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2000 வழங்கும் கிரகலட்சுமி திட்டத்தை வரும் 30ஆம் தேதி மைசூரில் வயநாடு எம்பி ராகுல் காந்தி தொடங்கி வைக்கிறார் . இத்திட்டத்தின் மூலம் 1.30 கோடி பெண்கள் பயன் பெற உள்ளனர்.