பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை!

 
rahul rahul

பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பு வழங்கியுள்ள குஜராத் மாநிலம் சூரத் மாவட்ட நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

2019ம் ஆண்டு நிரவ் மோடி தப்பி ஓடிய விவகாரத்தில், எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறதது என ராகுல் காந்தி பேசியிருந்தார். ராகுல் காந்தியின் இந்த பேச்சு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, 'நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என, திருடர்கள் அனைவரின் பெயருக்கு பின்னால் ஏன் மோடி என்ற பெயர் இருக்கிறது எனப் பேசினார். இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சிகள் பலவையும் கண்டனம் தெரிவித்தன. இதற்கு எதிராக பாஜக அவதூறு வழக்கு தொடர்ந்தது.

சூரத் நீதிமன்றத்தில் பாஜக நிர்வாகி ஒருவர் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடார்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. வழக்கு விசாரணையின் போது ராகுல் காந்தி நேரில் ஆஜரானார்.  இந்த வழக்கை விசாரித்த சூரத் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எச்.எச்.வர்மா, பிரதமரை அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் குற்றவாளி என தீர்ப்பு வழங்கினார். மேலும் இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 வருடம் சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இதனை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.