பாஜக உடன் கள்ள கூட்டணி! வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையம் குளறுபடி- ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு

 
ன் ன்

வாக்களித்த வாக்காளர்களின் விவரங்கள், பூத் வீடியோ பதிவுகளை தேர்தல் ஆணையம் வழங்க மறுப்பது ஏன்? என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

rahul gandhi press meet

டெல்லியில் வாக்காளர் பட்டியல் குறைபாடுகளை மேற்கோள் காட்டி பேசிய ராகுல்காந்தி, “பிரதமர் மோடி மிகக் குறைந்த பெரும்பான்மை பலத்துடன் மட்டுமே ஆட்சிக்கு வந்துள்ளார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஜனநாயகத்தை குழி தோண்டி புதைப்பது தேர்தல் ஆணையத்தின் வேலை அல்ல. CCTV காட்சிகள் மற்றும் வாக்காளர் பட்டியல் இந்த குற்றங்களுக்கு சாட்சியாக உள்ளது. நாடு முழுவதும் இதே போன்ற முறைகேடுகள் நடந்துள்ளதாக நம்புகிறோம். இந்திய அரசியலமைப்புக்கு எதிராக மிகப்பெரிய மோசடி நடந்துள்ளதை மக்களுக்கு தெரிவிக்கிறோம். வாக்களித்த வாக்காளர்களின் விவரங்கள், பூத் வீடியோ பதிவுகளை தேர்தல் ஆணையம் வழங்க மறுப்பது ஏன்? வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் இணைக்கப்படுகிறது.

மின்னணு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வழங்கினால் 30 விநாடிகளில் மோசடியை கண்டறியலாம். இந்தியாவில் திடீர் திடீரென தேர்தல் தேதிகள் மாற்றப்படுவது சந்தேகத்தை அதிகரிக்கிறது. வாக்காளர் பட்டியல் விவரங்களை நாங்கள் ஆய்வு செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் நினைக்கிறது. ஒரே வாக்காளர் உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநில தேர்தல்களிலும் வாக்களித்துள்ளார். இந்திய ஜனநாயக நடைமுறையை அழிப்பது தேர்தல் ஆணையத்தின் வேலை அல்ல, ஒரே வாக்காள பெயர் 4 வாக்குச்சாவடிகளில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. சில வாக்காளர்களின் பெயர்கள் பல்வேறு மாநிலங்களின் வாக்குச்சாவடிகளில் இடம்பெற்றுள்ளன. இல்லாத விலாசத்தை பதிவு செய்து, பல வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. வீட்டு எண் பூஜ்ஜியம் என பல வாக்காளர்களின் விலாசத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல வாக்காளர்களுக்கு புகைப்படங்கள் பதிவு செய்யப்படவில்லை, புகைப்படம் அடையாளம் காணும்படி தெளிவாகவும் இல்லை. வாக்காளர் பட்டியலில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான போலி முகவரிகள் உள்ளன. இந்திய தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக வாக்குகளை திருடுகிறது. மகாராஷ்டிரத்தில் 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5 மாதங்களில் அதிகமான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஒரே விலாசத்தில் 45 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்” எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

Image

அதன்படி ராகுல்காந்தி பாஜக தேர்தல் ஆணையத்தையும் வாக்குகளைத் திருடும் 5 வழிகளையும் அம்பலப்படுத்தியுள்ளார்.1.போலி வாக்காளர்கள் 2.போலி செல்லாத முகவரிகள் 3.ஒரே முகவரியில் மொத்த வாக்காளர்கள் 4.செல்லாத புகைப்படங்கள் 5.படிவம் 6 இன் தவறான பயன்பாடு. ECI யின் திருட்டு வேலையை அம்பலப்படுத்தியுள்ளார்.