பிரதமர் மோடியை சந்திக்கிறார் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்!
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார்.
ஜம்மு காஷ்மீர் அருகே பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தீவிரவாத தாக்குதல் நடத்திய நிலையில், இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார். இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஆலோசனை நடைபெறுகிறது. பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்திய நிலையில், அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து ஆலோசிக்கின்றனர். முன்னதாக ராஜ்நாத் சிங் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தியது குறிப்பிடதக்கது.


