சிபு சோரன் மறைவு : ராஜ்யசபா நிகழ்வுகள் ஒத்திவைப்பு..!!

 
சிபு சோரன் மறைவு : ராஜ்யசபா நிகழ்வுகள் ஒத்திவைப்பு..!! சிபு சோரன் மறைவு : ராஜ்யசபா நிகழ்வுகள் ஒத்திவைப்பு..!!

மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த சிபு சோரன் மறைவை ஒட்டி மாநிலங்களவையின் இன்றைய நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.  

 ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சிபு சோரன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 81.  உடல் நலப் பதிப்புக்காக டெல்லி மருத்துவமனையில் சிபு சோரன் நீண்ட காலமாக சிகிச்சை பெற்று வந்தார்.  இந்நிலையில்  வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அவர் மறைந்தார்.  சிபு சோரனின் மகன் ஹேமந்த் சோரன் தான் தற்போது கட்சியின் தலைவராகவும்,  ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

சிபு சோரன் மறைவு : ராஜ்யசபா நிகழ்வுகள் ஒத்திவைப்பு..!!

முன்னதாக  ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவராக சிபு சோரன் 38 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார்.  அத்துடன் கடந்த 2009 - 2010ம் ஆண்டுவரை ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வராகவும் , மன்மோகன் சிங் அமைச்சரவையில் ஒன்றிய அமைச்சராகவும் அவர் பதவி வகித்திருக்கிறார். தற்போது மாநிலங்களவை எம்.பி.யாகவும் இருந்துவருகிறார்.  இந்நிலையில்  மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த சிபு சோரன் மறைவை ஒட்டி மாநிலங்களவையின் இன்றைய நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.