விமான விபத்து- விசாரணைக்குழுவுக்கு 3 மாதங்கள் அவகாசம்: ராம் மோகன் நாயுடு

 
விசாரணைக்குழுவுக்கு 3 மாதங்கள் அவகாசம்  -  ராம் மோகன் நாயுடு விசாரணைக்குழுவுக்கு 3 மாதங்கள் அவகாசம்  -  ராம் மோகன் நாயுடு

விமான விபத்து தொடர்பான உயர்மட்டக் குழுவின் விசாரணையை 3 மாதங்களில் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு உலகப் பொருளாதார மன்றத்தின் இளம் உலகளாவிய  தலைவர் 2025 - இந்தியா டுடே

விமான விபத்து தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, “நேற்று மாலை 5.30 மணியளவில் விமானத்தின் கருப்பு பெட்டி கண்டறியப்பட்டது. கருப்புப் பெட்டி தகவல்களின் அடிப்படையில் இறுதி நேரத்தில் நடந்தது தெரிய வரும். கருப்புப் பெட்டியில் உள்ள தகவல்கள் மூலம் விமான விபத்துக்கான உண்மையான காரணமும் தெரிய வரும். விமான விபத்து தொடர்பான உயர்மட்டக் குழுவின் விசாரணையை 3 மாதங்களில் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விமான விபத்துக்கான காரணத்தை கண்டறிய சர்வதேச நிபுணர்களின் உதவியும் கோரப்பட்டுள்ளது.  விசாரணை தொடர்பாக உள்துறை செயலர் தலைமையில் உயர்மட்டக்குழு அமைத்துள்ளோம். விமான போக்குவரத்துத்துறை செயலர் உள்பட பல்வேறு துறை செயலர்கள் குழுவில் உள்ளனர். இறந்தவர்களை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனைகள் ஒருபுறம் தொடர்ந்து நடக்கின்றன.


போயிங் 787 ரக விமானங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. மேலும் போயிங் 787-8 ட்ரீம்லைனர் ரக விமானங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்படும். அகமதாபாத் விமான விபத்து ஒட்டுமொத்த தேசத்தையும் ஸ்தம்பிக்க வைத்துள்ளது. டெல்லியில் இருந்து அகமதாபாத் வரும் வரை விமானத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. அகமதாபாத்தில் 650 அடியில் இருந்து விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது” என்றார்.