“கற்க கசடறக் கற்பவை கற்றபின்" திருக்குறளை மேற்கொள்காட்டி குடியரசுத்தலைவர் உரை!!

 
ttn

நாட்டின் கல்வித்திட்டங்கள் குறித்து பேசும் போது திருக்குறளை மேற்கோள்காட்டி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.

2022- 23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு  உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,  பிரதமரின் வறுமை ஒழிப்பு திட்டம் மூலம் ஏழைகளுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.  நாடு முழுவதும் கிராமப்புறங்களில் ஆறு கோடி குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது . ஜல் ஜீவன் திட்டம் மூலம் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் பல கோடி பேர் பயனடைந்துள்ளனர். 

tn

வங்கிகளிலிருந்து ஏழைகள் கடன் பெறும் வகையில் மத்திய  அரசு திட்டங்களை தீட்டியுள்ளது. விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை விற்க பல வாய்ப்புகளை அரசு வழங்கியுள்ளது. விலை பொருட்களை பாதுகாக்க சேமிப்பு கிடங்கு வசதிகளை அரசு ஏற்படுத்தித் தந்துள்ளது. பெண் குழந்தைகளை பாதுகாப்போம்;  பெண் குழந்தைகளை படிக்க வைக்கும் திட்டம் பெண்கள் முன்னேற வழிவகை செய்துள்ளது என்றார்.

tn

ஜிஎஸ்டி வசூல் கடந்த ஒரு சில மாதங்களில் ஒரு லட்சம் கோடியை தாண்டியுள்ளது. ஏற்றுமதியில் நமது நாடு தொடர்ந்து உச்சம் பெற்று வருகிறது என்று கூறியதுடன் அத்துடன் கல்வி தொடர்பான தனது உரையின்போது , கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி குடியரசுதலைவர் பேசினார். அதில் Skill இந்தியா திட்டத்தின் கீழ் நாட்டில் ஏராளமான இளைஞர்கள் பயிற்சி பெற்றுள்ளனர் எணஎன்று பேசிய அவர்,  மிக குறைவான விலையில் இணையதள சேவையை பெறும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று; தொழில்நுட்ப உற்பத்தி துறையில் இந்தியா இப்போது உலகளவில் முதன்மையான இடத்தில் உள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள் விளையாட்டு துறையை ஊக்குவிப்பதற்காக அதிக கவனத்தைச் செலுத்தி வருகிறார்கள்; மத்திய அரசின் "கேலோ இந்தியா" திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் விளையாட்டு துறைக்கான கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் பொருளாதார முதுகெலும்பாக சிறு -குறு நடுத்தர தொழில்கள் இருக்கின்றன. சிறு குறு தொழில் துறையினர் சரியான காலத்தில் சரியான நிதிகளை பெறுவதே மத்திய அரசு உறுதி செய்கிறது .மத்திய அரசின் பல்வேறு திட்டங்களால் 13 லட்சம் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் பலன் அடைந்துள்ளன " என்று தெரிவித்தார். மேலும் சிறு விவசாயிகள் அவர்களது அருகில் உள்ள பகுதிகளிலேயே தங்களது விளை பொருட்களை விற்பனை செய்யும் வகையிலான ஏற்பாடுகளை அரசு  மேற்கொண்டுள்ளது; இயற்கை உணவு பொருட்களை உற்பத்தி செய்யவும் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.  இந்தியாவின் பாரம்பரியமான மழைநீர் சேகரிப்பு முறைகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; நாடு முழுவதும் உள்ள நதிகளை இணைக்கும் திட்டங்களில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.. மத்திய அரசால் ஆரம்பிக்கப்பட்ட சுய உதவி குழுக்கள் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு போதுமான பயிற்சிகளை வழங்கி உள்ளது; இந்த குழுவின் முக்கியமான நோக்கம், பெண்களை மையப்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.என்று தனது உரையில் குறிப்பிட்டார்