ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு..

 
Sakthi Gandha das


வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான  ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டியில் ரிசர்வ் வங்கி அவ்வப்போது மாற்றங்கள் செய்து வருகின்றன. அந்தவகையில் கடந்த 2020 மே மாதம் முதல் நடப்பாண்டி கடந்த பிப்ரவரி மாதம் வரையிலான காலக்கட்டத்தில் 6 முறை ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் மட்டும் 2.45% வரை  ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் 0.25%  ரெப்போ வட்டி உயர்த்தப்பட்டு , குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 6.50% ஆக  இருந்தது. அதன்பின்னர் கடந்த 5 மாதங்களாக ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படவில்லை.  

repo

இந்நிலையில், டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடனுக்கான வட்டியான ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை  என்று அறிவித்தார்.   குறுகியகால கடனுக்கான வட்டி விகிதம் எந்த மாற்றமும் இன்றி 6.5 சதவீதமாகவே நீடிக்கும் என்றும்  தெரிவித்துள்ளார்.   ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாததால் வீடு, வாகனங்களுக்கான கடன் விகிதத்தில் மாற்றம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வு மற்றும் நாடாளுமன்ற தேர்தலைக்  கருத்தில் கொண்டு வட்டி விகிதத்தில்  ரிசர்வ் வங்கி மாற்றம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.