அதிகரிக்கும் போர் பதற்றம்.. இந்தியா மௌனம் காப்பது ஏன்?? - சோனியா கேள்வி..

 
அதிகரிக்கும் போர் பதற்றம்.. இந்தியா மௌனம் காப்பது ஏன்?? - சோனியா கேள்வி.. அதிகரிக்கும் போர் பதற்றம்.. இந்தியா மௌனம் காப்பது ஏன்?? - சோனியா கேள்வி..

இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதல் முற்றி வரும் நிலையில், இந்தியா அமைதி காப்பது ஏன்? என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.  

 ஈரானின் அணு ஆயுத தளங்கள், ராணுவ நிலைகள் மற்றும் எண்ணெய் கிடங்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.  இதற்கு ஈரான்  தரப்பிலும் கடுமையான பதிலடி  கொடுக்கப்பட்டு வருகிறது.  இருதரப்பும் மாறி மாறி நடத்தும்  கடுமையான தாக்குதல்களால்,  இருப்பக்கத்திலுலே  ஏராளமான உயிரிழப்புகள்,  பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. தொடர் தாக்குதலால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஆரம்பத்திலிருந்தே இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்துவரும் அமெரிக்கா தற்போது ஈரான் மீது நேரடி தாக்குதல் நடத்தியிருக்கிறது.   ஈரானில் ஃபார்டவுவ் , நடான்ஸ் மற்றும் இஸ்பாஹான் ஆகிய மூன்று அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருப்பது ஒட்டுமொத்த உலகையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.  

modi

அமெரிக்காவில் இந்த செயலுக்கு பல்வேறு நாடுகளும் எதிர்ப்பையும், ஆதரவையும் தெரிவித்து வரும் நிலையில் இந்தியா தொடர்ந்து மௌனம் காத்து வருகிறது. இதுகுறித்து கங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு கட்டுரை எழுதியுள்ளார்.  அதில், இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இந்தியா அமைதி காப்பது ஏன்? என கேள்வியெழுப்பியுள்ளார்.  இந்தியாவின் நிலைப்பாட்டை விமர்சித்துள்ள அவர், இது ராஜதந்திர தவறு என்றும், தனது தார்மீக பொறுப்பில் இருந்து விலகிச் செல்வதுபோல் ஆகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

இஸ்ரேல் தாக்குதல்  சட்டவிரோதமானது மற்றும் இறையாண்மையை மீறிய செயலாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ள சோனியா காந்தி, காசாவில் நிகழப்படும் கொடூரமான தாக்குதல்களும் கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார்.  இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையே ஆழமான நாகரீகத் தொடர்பு இருப்பதாகவும்,  இஸ்ரேலுடன் இணைந்து இறையாண்மை கொண்அ பாலஸ்தீனம் அமைய வேண்டும் என்கிற இந்தியாவின் நீண்ட கால கொள்கையை மோடி அரசு கைவிட்டுவிட்டதாகவும் விமர்சித்துள்ளார்.  ஆகையால் இனியும் தாமதிக்காமல், இந்தியா குரல் எழுப்ப வேண்டும் என்றும், விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்துளாளார்.