மேற்கு வங்க ஆளுநராகிறார் ஆர்.என்.ரவி?

 
ச்

மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் திடீர் ராஜினாமா செய்தியால் அதிர்ச்சி அடைந்துள்ளேன் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

மேற்கு வங்க மாநில ஆளுநர் ஆனந்த போஸ் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். 2022 நவம்பர் முதல் பதவி வகித்து வந்த அவர், தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு அனுப்பினார். இன்னும் ஒரு மாதத்தில் மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளுநர் ராஜினாமா செய்துள்ளார்.

இதுதொடர்பாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, “மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் திடீரென ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு பதிலாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி நியமிக்கப்படுவதாக உள்துறை அமைச்சர் என்னிடம் தெரிவித்தனர். இது அதிர்ச்சியாகவும் கவலையாகவும் உள்ளது. இது குறித்து மத்திய அரசு தன்னிடம் ஆலோசனை செய்யவில்லை” என்று விமர்சித்துள்ளார்.