2024-25ல் 34 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.. ஆனால் தமிநாட்டிற்கு ரூ1 கூட இல்ல.. - மத்திய அரசு எழுத்துப்பூர்வ பதில்..!!

 
புதிய நாடாளுமன்றம் கட்டடம் புதிய நாடாளுமன்றம் கட்டடம்

புதிய தேசிய கல்விக் கொள்கை மற்றும் அதன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை ஏற்காத மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.1 கூட நிதி வழங்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

மத்திய அரசு கட்டாய கல்வித்திட்டத்தின் கிழ் அனைத்து மாநிலங்களுக்கும் கல்வி நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.  அந்தவகையில்  புதிய தேசிய கல்விக் கொள்கை மற்றும் அதன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை  ஏற்ற அனைத்து மாநிலங்களுக்கும் கடந்த நிதி ஆண்டில் ரூ. 34,458 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது.  அதேநேரம் இந்த திட்டங்களை ஏற்காத தமிழ்நாடு உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கு  இரு ரூபாய் கூட இந்த திட்டத்தின் நிதி ஒதுக்கப்படாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

சமக்ர சிக்‌ஷா அபியான் திட்டத்தின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ள நிதி எவ்வளவு?  என்றும்,  சமக்கிர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் எந்தெந்த மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும்  திமுக எம்.பி, கணபதி ராஜ்குமார் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.   இதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள மதிய கல்வித்துறை அமைச்சர், கடந்த 2018 ஆம் ஆண்டு முதலில் திட்டம் அமலில் இருக்கிறது.  கட்டாய கல்வி உரிமைச் சட்டம்,  ஆசிரியர் பயிற்சி கல்வி,   தொடக்க கல்வி மற்றும்  மேல்நிலைக் கல்வி என அனைத்திற்கும் ஒதுக்கப்பட்ட நிதி சமக்கிற சிக்ஷா அபியான்  திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுவிட்டதாக தெரிவித்தார்.  

புதிய கல்வி கொள்கையால் கல்வித்துறையை தனியார் நிறுவனங்கள் கைப்பற்றும் அச்சுறுத்தல் உள்ளது.. காங்கிரஸ்

அதன்படி கடந்த 2024- 25 ஆம் நிதி ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக உத்திரபிரதேசத்திற்கு ரூ.6,264 கோடியும், பிகாருக்கு 4,217 கோடி ரூபாயும்,  ராஜஸ்தான் மாநிலத்திற்கு 3,090 கோடி ரூபாயும், குஜராத்திற்கு 1,245 கோடியும்,  ஆந்திர மாநிலத்திற்கு 1,240 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். மொத்தமாக 2024 - 25 ஆம் நிதி ஆண்டில் மட்டும் சமக்ர சிக்‌ஷா அபியான் திட்டத்தின் கீழ் கல்வி நிதியாக 34,458 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டதாக கூறினார்.  

இருந்தபோதிலும் இத்திடத்தின் கீழ்  தமிழ்நாட்டிற்கு ஒரு ரூபாய் கூட விடுவிக்கப்படாததை ஒன்றிய அரசு மீண்டும் எழுத்துப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.  இதற்கு முந்தைய ஆண்டுகளில்   நவோதயா பள்ளிகளை தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை என்ற போதுகூட  சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது புதிய கல்விக் கொள்கை ஏற்க மறுத்துள்ள தமிழ்நாடு,  புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள  ஹிந்தியை கட்டாயமாக்கும் திட்டமான பிஎம் ஸ்ரீ திட்டத்திலும் கையெழுத்திடவில்லை. இதனால் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் மத்திய அரசு வஞ்சித்துள்ளது. மேலு,  இதே நிலைப்பாட்டில் உள்ள கேரளா மற்றும் மேற்குவங்க மாநிலங்களுக்கும் ஒரு ரூபாய் கூட கல்வி நிதி ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.