"ஏர்போர்ட்டில் ஆர்டிபிசிஆர் கட்டாயம்; முடிவு வந்தால்தான் வெளியே அனுமதி"

 
விமான நிலையம்

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டிருக்கும் ஒமைக்ரான் கொரோனா உலக மக்களைப் பீதியில் ஆழ்ந்துள்ளனர். இது சாதாரண கொரோனாவைக் காட்டிலும் 10 மடங்கு வேகத்தில் பரவக் கூடியது என சொல்லப்படுகிறது. இதுவரை உருமாறிய கொரோனா வைரஸ்களில் டெல்டா வைரஸை அதிக ஆபத்தானது. ஆனால் அந்த டெல்டாவையே ஓவர்டேக் செய்யும் விதமாக அதிக ஆபத்து நிறைந்த வைரஸாக ஒமைக்ரான் உருவாகியுள்ளது. இது 32 முறை உருமாற்றமடைந்து ஓமைக்ரானாக பரவி வருகிறது. 

Chennai airport introduces rapid RT-PCR testing facility - The Hindu

ஆப்பிரிக்க நாடுகளில் பரவ ஆரம்பித்த இந்த ஒமைக்ரான், தற்போது பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. இதனால் அச்சமடைந்த உலக நாடுகள் ஆப்பிரிக்க நாடுகள் இடையேயான போக்குவரத்தை ரத்து செய்துள்ளன. சில நாடுகள் அந்நாட்டிலிருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணிக்கின்றன. இந்த கொரோனா இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களையும் தாக்கும் என சொல்லப்பட்டுள்ளதால் மக்களிடையே கடும் பீதி ஏற்பட்டுள்ளது. 

Moderna Says New Vaccine for Omicron May Be Ready in 2022 | Time

இந்தியாவில் இதுவரை யாரும் ஒமைக்ராவால் பாதிக்கப்படவில்லை. இருப்பினும் எச்சரிக்கையாக இருக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா ஹாட்ஸ்பாட்களை மிகவும் கவனமாக கவனிக்க வேண்டும் என்றும், ஆர்டிபிசிஆர் சோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் தென் ஆப்ரிக்கா, சிங்கப்பூர், சீனா, பிரேசில், போத்ஸ்வானா, மொரீஷியஸ்,  இஸ்ரேல், ஹாங்காங், ஜிம்பாப்வே உள்ளிட்ட நாடுகள் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளன. 

Don't call B.1.617 COVID strain 'Indian variant': Health Ministry -  BusinessToday

இந்த நாடுகளிலிருந்து இந்தியா வருகை தரும் பயணிகள், பயணத்திற்கு முன்பே கொரோனா நெகட்டிவ் சான்றிதழை சவிதா இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.  விமான நிலையத்தில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்படும். பரிசோதனை முடிவு வரும் வரை அவர் விமான நிலையத்திலேயே தங்கி இருக்க வேண்டும். டிசம்பர் 1ஆம் தேதி முதல் நடைமுறை அமலுக்கு வருகிறது.