காவலர்களுக்கு காவி சீருடை - சர்ச்சையை கிளப்பும் பாஜக அரசு

 
tn

 காசி விஸ்வநாதர் கோயிலுக்குள் பணியமர்த்தப்பட்டுள்ள போலீஸ் அதிகாரிகளுக்கு புதிய  சீருடை அறிமுகப்படுத்தப்  பட்டுள்ளது. 

காசி விஸ்வநாதர் கோவில் உலகப் புகழ் பெற்ற வழிபாட்டுத்தலங்களில் ஒன்றாக உள்ளது.  இங்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.   இங்கு காசி விஸ்வநாதர் கோவிலில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியை கவனித்து வரும் காவலர்களுக்கு புதிய சீருடைகள் வழங்கப்பட்டுள்ளது. 

tn

பக்தர்கள் பூசாரிகளை போல காவி உடைய அணிந்து பணியாற்றி வருகின்றனர்.  இது குறித்து வாரணாசி காவல் ஆணையர் மோஹித் அகர்வால் கூறும் போது,  நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.  அவர்களுக்கு தரிசனத்திற்கான மன நிறைவை அளிக்க விரும்புகின்றோம்.  அனைத்து நாளும் கூட்டம் அதிகமாக இருப்பதால் அனைவரும் கடவுளை சிக்கல் இன்றி தரிசனம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம். அதன் காரணமாக கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.  சில நேரங்களில் காவலர்கள் தங்கள் வலுக்கட்டாயமாக தள்ளுவதாக  புகார் தெரிவிப்பதும் உண்டு. அதுவே பூசாரிகள் அதை நீ செய்தால் பணிவுடன் ஏற்றுக் கொள்வார்கள். அதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

akilesh
இருப்பினும் இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் , இதை  சமூக விரோத சக்திகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. இதனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். அதன் பின்னர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில அரசின் பதில் என்னவாக இருக்கும்? இது கண்டனத்துக்குரியது என்றார்.