"காஷ்மீர் தாக்குதலில் எங்களுக்கு எந்த பங்கும் இல்லை"- லஷ்கர்-இ-தொய்பா

 
s s

காஷ்மீர் தாக்குதலில் எங்களுக்கு எந்த பங்கும் இல்லை என லஷ்கர்-இ-தொய்பா துணைத் தலைவர் சைஃபுல்லா கசூரி, கண்களில் கண்ணீருடன் கூறியுள்ளார்.

Pahalgam Terror Attack: ये है पहलगाम आतंकी हमले का मास्टरमाइंड सैफुल्लाह  खालिद, जिस पर पाक सेना बरसाती है फूल -amp

தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் மேல் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். 4 பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 29 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பஹெல்காம் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள்.  

இந்நிலையில் காஷ்மீர் தாக்குதலில் எங்களுக்கு எந்த பங்கும் இல்லை என லஷ்கர்-இ-தொய்பா துணைத் தலைவர் சைஃபுல்லா கசூரி, கண்களில் கண்ணீருடன் கூறியுள்ளார். பாகிஸ்தானில் அமைதியைக் குலைக்க யாரோ முயற்சி செய்கிறார்கள் என்றும்,  உலக நாடுகள் இந்தியாவை ஆதரிக்க வேண்டாம் எனவும் லஷ்கர்-இ-தொய்பா துணைத் தலைவர்  எச்சரிக்கை விடுத்துள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு சைஃபுல்லா கசூரி மூளையாக செயல்பட்டார் என குற்றச்சாட்டு முன்வைக்கபடும் நிலையில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்தியா நாடகம் ஆடுகிறது இந்த தாக்குதலை அவர்களே செய்தார்கள் என்றும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு கூறியுள்ளது.