பீகாரை முழுமையாக ஆக்கிரமித்தது பாஜக - புதிய முதல்வர் தேர்வு
Apr 14, 2026, 16:41 IST1776165104954
பீகார் முதல்வராக நிதீஷ் குமார் இருந்த நிலையில் அவர் ராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில் தற்பொழுது பீகாரின் புதிய முதல்வராக பாஜகவின் சாம்ராட் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்
பீகார் மாநிலத்தின் புதிய முதல்வராக பாஜகவை சேர்ந்த சாம்ராட் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதல்வர் பதவியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்த நிலையில் சாம்ராட் சவுத்ரி தேர்வு செய்யபட்டுள்ளார். பீகார் மாநில முதல்வராக நாளை பதவியேற்க உள்ளார் சாம்ராட் சவுத்ரி. இதன் மூலம் மற்றொரு முக்கிய மாநிலக் கட்சி இடமிருந்து மாநில அரசை கைப்பற்றியது பாஜக. பீகாரில் பாஜகவைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சர் பதவியை ஏற்பது இதுவே முதல்முறையாகும். சாம்ராட் சவுத்ரி தற்போது பீகார் துணை முதலமைச்சராகவு, உள்துறை அமைச்சராகவும் இருந்து வருகிறார்.



