தேர்தல் பத்திரங்களின் எண்களை வெளியிட SBI வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

 
supreme court

அரசியல் கட்சிகளுக்கு ரொக்கமாக நன்கொடை தருவதை தவிர்க்கும் பொருட்டு 2018 ஜனவரியில் 'தேர்தல் பத்திரம்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் முறைக்கு எதிரான வழக்கு  உச்சநீதிமன்றத்தில்  நடைபெற்று வந்தது.  நன்கொடை தருவோர் குறித்த விவரங்களை தெரிவிக்கத் தேவையில்லை என்பது வாக்காளர்களின் உரிமைகளை பறிப்பதாக உள்ளது. தேர்தல் பத்திரங்கள் திட்டம் அரசியல் சட்டத்திற்கு புறம்பானவை. நன்கொடை வழங்குவது என்பது அரசியல் கட்சியிடம் ஆதாயத்தை எதிர்பார்த்து செய்வது தற்போதுள்ள சட்டங்கள், தேர்தல் நிதியை கார்ப்பரேட், தனி நபர்கள் மூலம் பெற வழிவகுக்கிறது என்று  தேர்தல் பத்திரங்களுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். எனவே தேர்தல் பத்திரங்கள் திட்டம் ரத்து செய்யப்பட்டது.

sbi

தேர்தல் பத்திர விவரங்களை 12 ஆம் தேதி  மாலைக்குள் எஸ்பிஐ வங்கி வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட எஸ்பிஐ வங்கி கால அவகாசம் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பத்திர விவரங்களை மார்ச் 15க்குள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய ஆணை பிறப்பித்தது. 

இந்நிலையில் தேர்தல் பத்திரங்களின் எண்களை வெளியிட SBI வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்தில் ஒப்படைத்த SBI, ஒவ்வொரு பத்திரத்துக்கும் உள்ள எண்களை குறிப்பிடவில்லை.

SBI வாடிக்கையாளர்களே உஷார்… அக்கவுண்டில் பணத்தை சுருட்டும் சீன ஹேக்கிங் கும்பல்!

தேர்தல் பத்திர எண்களை ஏன் வெளியிடவில்லை என எஸ்.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ள நீதிமன்றம், தேர்தல் பத்திர எண்களையும் எஸ்.பி.ஐ. வெளியிட வேண்டும் என தலைமை நீதிபதி சந்திரசூட் அடங்கிய 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து ஆணை பிறப்பித்துள்ளது