சந்திரபாபு நாயுடுவின் மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

 
supreme court

சிறையில் அடைக்கப்பட்டுள்ள சந்திரபாபு நாயுடுவின் மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலத்தில் 2019 ஆம் ஆண்டு சிமெண்ட்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த போது 317 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. திறன் மேம்பாட்டு துறையில் ஊழல் நடந்திருப்பதாக கூறி அவரை ஆந்திர போலீசார் அவரை கைது செய்தனர்.  சி.ஐ.டி. அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்ட சந்திரபாபு நாயுடுவிடம் ஊழல் வழக்கு தொடர்பாக பல மணி நேரம் விசாரணை நடைபெற்றது.  இதையடுத்து விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு செப்.22 வரை 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி விஜயவாடா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அவரது நீதிமன்ற காவல் 22ம் தேதியுடன் நிறைவு பெற்ற நிலையில், மேலும் இரண்டு நாட்கள் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று அவர் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் மேலும் 11 நாட்கள் நீட்டிக்கப்பட்டது.

Chandrababu Naidu proposes to establish a music university and a national award in commemoration of SPB

இந்த நிலையில், சந்திரபாபு நாயுடுவின் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஊழல் வழக்க ரத்து செய்ய கோரியும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரியும் சந்திரபாபு தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. ஆனால் சந்திரபாபு நாயுடுவின் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. திறன் மேம்பாட்டு நிதி மோசடி வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை மீண்டும் முறையிடவும் அறிவுறுத்தியுள்ளது.