கேரளாவில் கொளுத்தும் வெயில் - 10 மாவட்டங்களுக்கு 25ஆம் தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை

 
tn

கேரளாவில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் 10 மாவட்டங்களுக்கு 25ஆம் தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. 

summer
கேரளாவில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது.  ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் மேலும் அதிகரித்து வருகிறது.  இதனால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  பாலக்காடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகி வரும் நிலையில்,  தண்ணீர் அதிக அளவில் பருகுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.  அதேவேளையில் சில மாவட்டங்களில் கோடை மழையும் பெய்து வந்தது. இதனால் அந்த மாவட்டங்களில் தற்போது வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்து காணப்படுகிறது.இந்நிலையில் பத்தினம் திட்டா, எர்ணாகுளம், கண்ணூர், ஆலப்புழா, கோட்டயம், மலப்புரம், கொல்லம், திருச்சூர், கோழிக்கோடு, பாலக்காடு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் உயர் வெப்பநிலை எச்சரிக்கை மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

summer

திருச்சூர் மற்றும் கொல்லம் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் என எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.  கேரளாவில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், கோடை வெப்பம் அதிகரித்துள்ளது.