செகந்திராபாத்தில் இருந்து திருப்பதிக்கு வந்தே பாரத் ரயில் - 5வது முறையாக சந்திர சேகர ராவ் புறக்கணிப்பு..

 
செகந்திராபாத்தில் இருந்து திருப்பதிக்கு வந்தே பாரத் ரயில் - 5வது முறையாக சந்திர சேகர ராவ் புறக்கணிப்பு..

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் -  திருப்பதி இடையே வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதனிடையே  பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் சந்திர சேகர் ராவ் பங்கேற்காமல் புறக்கணிக்கபதாக புகார் எழுந்துள்ளது.  

ரயில்வே துறையில் புதிய பரிணாமத்தை கொண்டு வரும் விதமாக மத்திய அரசு ‘வந்தே பாரத்’ரயிலை அறிமுகப்படுத்தி வருகிறது.  நாடு முழுவதும் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டு வருகிறது.  அந்தவகையில் ஆந்திர மாநிலம் செகந்திராபாத்திலிருந்து - திருப்பதிக்கு வந்தய பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் ரயிலில் பயணம் மேற்கொண்ட பள்ளி மாணவர்களுடன்  கலந்துரையாடினார். இந்த நிலையில் வந்தே பாரத் ரயிலில் பல இடங்களில் எருமை மாடுகள் மோதி, ரயில் சேதம் அடைந்ததை சுட்டிக்காட்டும் விதமாக ஆளும்  பிஆர்எஸ் கட்சியை சேர்ந்தவர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

modi

எருமை மாடுகள் தவறுதலாக பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ள வந்தே பாரத் ரயில்களுக்கு குறுக்கே வரவேண்டாம்  சுவரொட்டிகளை ஒட்டி,  எருமை மாடுகளுக்கும் அந்த நோட்டீஸுகள் வழங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மேலும், பிரதமர் மோடி கலந்துகொண்ட  இந்த நிகழ்ச்சியில் தெலுங்கானா மாநில முதல்வர் பங்கேற்பதற்காக புரோட்டோகால் அடிப்படையில் அவருக்கும்  மேடையில் தனி இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.  ஆனால் அவர் பங்கேற்கவில்லை. பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை முதல்வர் கேசிஆர் தவிர்த்து வருகிறார். ஏற்கனவே பிஆர்எஸ் கட்சி ஆட்சிக்கு வந்த கடந்த 14 மாதங்களில் பிரதமர் மோடி தெலுங்கானாவிற்கு 4 முறை வருகை தந்திருக்கிறார்.

சந்திரசேகர ராவ்..

ஆனால் அதில் பங்கேற்காமல் சந்திரசேகர ராவ் புறக்கணித்து வந்த நிலையில், இன்று  ஐந்தாவது முறையாக இன்றும் பிரதமரை வரவேற்பதற்கோ,  அந்த நிகழ்ச்சியில்  பங்கேற்பதையோ  தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் புறக்கணித்துள்ளார். விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்பதற்காக தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி , மாநில பாஜக தலைவர் பண்டிட் சஞ்சய் ஆகியோர் மட்டுமே பங்கேற்றிருந்தனர்.