இந்தியாவில் தயாரான கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி - விலை என்ன தெரியுமா?

 
vaccine

இந்தியாவில் முதன்முறையாக தயாரிக்கப்பட்ட கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி இந்த மாதம் முதல் தனியார் சந்தைகளில் விற்பனைக்கு கிடைக்கும் என சீரம் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

உலக அளவில் உள்ள மொத்த பெண்களில் சுமார் 16 சதவீதம் பேர் இந்தியாவில் உள்ளனர். உளக அளவில் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை புற்று நோயில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் ஏற்படுவதாக ஆய்வு கூறுகிறது. இந்தியாவில் உள்ள மொத்த பெண்களில் 1.6 சதவீதம் பேர் கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 1 சதவீதம் பேரு கர்ப்பப்பை புற்றுநோயால் இறக்கும் ஆபாயத்தை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் சுமார் 80 ஆயிரம் பேர் இந்த நோயால் பாதிக்கப்படுவதாகவும், அதில் 35,000 பேர் உயிரிழப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுவரை இதற்கான தடுப்பூசிகளை இந்தியா வெளிநாடுகளில் இருந்து அதிக விலைக்கு வாங்கி வருகிறது. 

serum

இந்நிலையில்,   சீரம் நிறுவனம் பயோடெக்னாலஜி துறையுடன் இணைந்து, 'செர்வாவேக்' என்ற பெயரில் கர்ப்பபை வாய் புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இந்த தடுப்பூசியை 9 வயது முதல் 14 வயது உள்ள பெண் பிள்ளைகளுக்கு செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் முதன்முறையாக தயாரிக்கப்பட்ட கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி இந்த மாதம் முதல் தனியார் சந்தைகளில் விற்பனைக்கு கிடைக்கும் என சீரம் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இரண்டு டோஸ்கள் கொண்ட இந்த தடுப்பூசியின் விலை 2000 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.