இது என்னடா விநோதாமா இருக்கு! அக்னி குண்டத்தை சுற்றி வலம் வந்த ஆடுகள்!

 
s

ஆந்திராவில் கால்நடைகள் நோய், நொடியின்றி வாழ திருவிழா நடத்தப்பட்டது. அதில் ஆடுகள் அக்னி  குண்டத்தை சுற்றி வலம் வந்தன.


ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம்  மடகஷிரா மண்டலம் கோர்புகொண்டா கிராமத்தில் காய்ந்த மரக்கிளைகள் கொண்டு அக்னி குண்டம் அமைத்து அந்த நெருப்பை சுற்றி கால்நடைகள், ஆடுகள் வந்தால் எந்தவித நோய் தொற்று ஏற்படாது என்பது அந்த ஊர் மக்கள் நம்பிக்கை. அவ்வாறு செய்வதால் காட்டமராயுடு, தாடிநாகம்மா எனும் கிராம தேவதைகள் மகிழ்ச்சி அடைந்து ஊரையும் காப்பாற்றுவதாக கிராமத்தினர் கூறுகின்றனர். இதனையடுத்து நேற்று ஊரில் உள்ள ஆடுகளை அக்னி குண்டத்தில் நெருப்பை சுற்றி வலம் வந்து பூஜை செய்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.