கொச்சி கடலில் மூழ்கிய கப்பல்... ஆபத்தான கண்டெய்னர்கள் கரை ஒதுங்குவதால் பரபரப்பு

 
ச் ச்

கேரளா, விழிஞ்ஞம் துறைமுகத்திலிருந்து கொச்சிக்கு புறப்பட்ட சரக்கு கப்பல் கடலில் முழுவதுமாக மூழ்கியது. 

கேரளா, விழிஞ்ஞம் துறைமுகத்திலிருந்து கொச்சிக்கு புறப்பட்ட சரக்கு கப்பல் கடலில் முழுவதுமாக மூழ்கியது. சரக்கு கப்பலில் பணியில் இருந்த அனைத்து ஊழியர்களும் காப்பாற்றப்பட்ட நிலையில், கப்பல் முழுவதுமாக இன்று கடலில் மூழ்கியது. சரக்கு கப்பலில் இருந்த கண்டெய்னர்கள் மணிக்கு ஒரு கிலோ மீட்டர் வேகத்தில் கரைக்கு நகர்ந்து வந்த நிலையில், கண்டெய்னர்களில் ஒன்று கொல்லம் பகுதியில் கரை ஒதுங்கியது.


சரக்கு கப்பலில் இருக்கும் 640 கண்டெய்னரில், 13 கண்டெய்னரில் மிக ஆபத்தான பொருட்கள் உள்ளதால் காவல்துறை தீவிர கண்காணித்துவருகின்றனர். சரக்கு கப்பல் மூழ்கி இருக்கும் இடத்தை சுற்றி கடலோர காவல் படை, சிறிய விமான மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் ராதாபுரம் முகாமில் இருந்து ஆய்வாளர கலையரசன் தலைமையில் 30 பேர் கொண்ட  மீட்புப்படையினர் கேரளா விரைந்துள்ளனர். கடலுக்குள் விழுந்த 640 கண்டெய்னர்களில் 367 டன் எரி எண்ணெய் மற்றும் 84 டன் டீசல் இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் சில கண்டெய்னர்களில் கந்தக ரசாயனங்கள் இருப்பதால் கடலில் ரசாயனம் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.