மெல்லக் கொல்லும் விஷம் .. சோதனைக்கு அனுப்பப்பட்ட ரத்த மாதிரிகள்..திக்திக் சரிதாநாயர்

 
sa

கேரளாவில் சோலார் பேனல் மோசடி வழக்கில் தொடர்புடைய சரிதா நாயருக்கு மெல்லக் கொல்லும் விஷம் கொடுக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன.  

 கேரள மாநிலத்தில் உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சோலார் பேனல் மோசடி வழக்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.   இந்த வழக்கில் சரிதா நாயகர் சிக்கினார்.  

 இது தொடர்பான வழக்குகள் தற்போதும் நடந்து வருகிறது .  இது மட்டுமல்லாமல் சரிதா நாயர் மீது  மேலும் பல மோசடி வழக்குகள் கேரளாவிலும்,  தமிழ்நாட்டில் கோவை நீதிமன்ற உள்பட பல்வேறு இடங்களிலும் நடந்து வருகின்றன.

sa

 இந்த நிலையில் தான் சரிதானா நாயர்,   தன்னிடம் உதவியாளராகவும் கார் ஓட்டுநராகவும் இருந்த பினுகுமார் என்பவர் கடந்த கடந்த 2018 ஆம் ஆண்டு முதற் கொண்டு தனக்கு உணவிலும்,  குளிர் பானங்களிலும் மெல்ல கொல்லும் விஷத்தை கொடுத்ததாக புகார் கொடுத்திருக்கிறார்.   இதனால் குற்றப்பிரிவு காவலர்கள் வினுகுமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் .  

சரிதா நாயரின் குற்றச்சாட்டின் உண்மை தன்மையை சோதிப்பதற்காக சரிதாநாயரின் முடி,  ரத்தமாதிரி ஆகியவற்றை நீதிமன்றத்தின் மூலம் சேகரித்து டெல்லியில் உள்ள மத்திய பாரசிக் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்திருக்கின்றனர் .  இந்த சோதனை முடிவுகள் வந்த பின்னர் தான் விவகாரத்தில் உண்மை தன்மை வெளியே வரும் என்று தெரிய வருகிறது.

சரிதா நாயர் செய்த மோசடிகள் அனைத்தும் தனக்குத் தெரியும் என்று சொல்வதால் அபாண்டமாக பலி சுமத்துகிறார் என்று மறுப்பு தெரிவித்திருக்கிறார் வினுகுமார்.