”பாகிஸ்தான் தெரிவித்த அனைத்தும் பொய்” - கர்னல் சோபியா குரேஷி
இந்திய விமானப்படை தளங்களை தாக்கிய பாகிஸ்தான் தவறான தகவல்களை பரப்பியது என கர்னல் சோபியா குரேஷி கூறியுள்ளார்.

போர் நிறுத்தம் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கர்னல் சோபியா குரேஷி, “சண்டிகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் கூறிய அனைத்தும் பொய்யானது. இந்திய விமானப்படை தளங்களை தாக்கியதாகவும் பாகிஸ்தான் பொய் தகவல்களை பரப்பியது. S-400, பிரம்மோஸ் ஏவுதள அமைப்பு உள்ளிட்டவற்றை தாக்கியதாக பாகிஸ்தான் பொய் தகவல்களை பரப்பியது. மசூதிகளை இந்தியா தாக்கியதாகவும் பாகிஸ்தான் ராணுவம் வதந்திகளை பரப்பியது. இந்தியா நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது.
இந்தியா மதசார்பற்ற நாடு, எந்த மதத்தையும் குறிவைத்து எப்போதும் தாக்குவதில்லை. இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தானின் முக்கியத்துவம் வாய்ந்த விமானப்படை தளங்களுக்கு சேதம். இந்தியாவின் இறையாண்மையை காக்க முப்படைகள் எப்போதும் தயாராக இருக்கும்.” என்றார்.


