பிரதமர் மோடியுடன் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே சந்திப்பு!

 
PM Modi

இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசினார்.  

இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இந்தியா வந்துள்ளார். நேற்று இந்தியா வந்த இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு மத்திய அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் நேற்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இருநாட்டு எல்லை விவகாரங்கள் மற்றும் மீனவர்கள் பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசினார். டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பிதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இருநாட்டு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தனர். குறிப்பாக பிரதமர் மோடி, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது குறித்து ரணில் விக்ரமசிங்கேவிடம் பேசியதாக கூறப்படுகிறது. இதேபோல் இருநாட்டு உறவுகள், இலங்கை தமிழர்கள் நலன் ஆகியவை குறித்தும் பிரதமர் மோடி இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவிடம் விசாரித்த்தாக தகவல் வெளியாகியுளது.