ஆண் நண்பருடன் படம் பார்க்க சென்ற காதலி! கடுப்பான காதலன் செய்த வெறிச்செயல்
நண்பருடன் படம் பார்க்க டிக்கெட் முன்பதிவு செய்து அழைத்து வந்த இடத்தில் காதலனையும் வரவழைத்தால் கத்தியால் குத்தி தப்பி சென்ற காதல் ஜோடியின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கித்தலூரைச் சேர்ந்த லோகேஷ் எம்.பி.யூ.பிரிவில் (மோகன்பாபு பல்கலைக்கழகத்தில் ) இரண்டாம் ஆண்டு பாரா மருத்துவப் படிப்பை படித்து வருகிறார். இதேகல்லூரியில் சூலூர்பேட்டையைச் சேர்ந்த காவ்யாவும் அதே படிப்பை படித்து வருகிறார். இதனால் இருவரும் நட்பாக இருந்தனர். காவ்யா சனிக்கிழமை திரையரங்கிற்கு செல்ல முடிவு செய்து அதற்கு முந்தைய நாள் திருப்பதியில் உள்ள பிஜிஆர் தியேட்டரில் இருவருக்கும் டிக்கெட் புக் செய்துள்ளார். இதை தான் ஐந்து வருடங்களாக காதலித்து வரும் சூலூர்பேட்டையை சேர்ந்த கார்த்திக்கிடம் கூறி, அவரையும் படத்திற்கு வருமாறு கூறியுள்ளார்.
கார்த்திக்கும் டிக்கெட் புக் செய்துவிட்டு படத்திற்கு வந்தான். காவ்யாவுடன் லோகேஷ் நட்பாக நெருங்கி பழகுவதை விரும்பாத கார்த்திக் தன்னுடன் மறைத்து கொண்டு வந்திருந்த கத்தியால் லோகேஷ் வயிற்றில் சரமாரியாக குத்திவிட்டு காவ்யாவை அழைத்து கொண்டு ஓடிவிட்டார். இதனால் படம் பார்த்து கொண்டிருந்தவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. தியேட்டர் நிர்வாகம் கிழக்கு காவல் நிலைய போலீசுக்கு தகவல் கொடுத்தனர். டிஎஸ்பி வெங்கடநாராயணா, இன்ஸ்பெக்டர் மகேஸ்வர ரெட்டி, எஸ்.ஐ. நாகேந்திரபாபு ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த லோகேஷ் திருப்பதி ரூயா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
காவ்யாவும் தானும் நல்ல நண்பர்கள் என்றும், அவள் கார்த்திக்கை காதலிப்பது தனக்குத் தெரியும் என்றும் லோகேஷ் மருத்துவமனையில் போலீசாரிடம் கூறினார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தலைமறைவான கார்த்திக், காவ்யா ஆகிய இருவரையும் தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.